சனி, 26 ஜூலை, 2025 அன்று 9:25:27 AM
திருவள்ளூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 30-க்கும் மேற்பட்ட தனிப்படைக் குழுக்கள் 75 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரித்து, சந்தேக நபரை பிடித்தது எப்படி? கைதான நபர் இப்போது எங்கே?
சனி, 26 ஜூலை, 2025 அன்று 11:32:40 AM
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான மோதல் ‘போராக உருவெடுக்கக்கூடும்’ என தாய்லாந்து எச்சரித்துள்ளது. இந்த மோதலால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்; போராக மாறிய சிக்கலின் ஆணிவேர் சிவாலயம்
சனி, 26 ஜூலை, 2025 அன்று 9:59:51 AM
காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது. உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், “ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனி, 26 ஜூலை, 2025 அன்று 6:07:54 AM
உலகின் மிகச்சிறிய இஸ்லாமிய நாடான மாலத்தீவு இந்தியாவுக்கு ஏன் முக்கியமானது. 1,200 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டில் சீனா ஆதிக்கத்தை நிறுவ ஏன் முயலுகிறது என்பதை இந்த செய்தியில் காணலாம்.
__
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கலாம்.
சனி, 26 ஜூலை, 2025 அன்று 8:06:27 AM
ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது மூளை சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும் போதுமானதாக இருக்கும் என்று ஒரு முக்கிய ஆய்வு கூறுகிறது.
சனி, 26 ஜூலை, 2025 அன்று 3:05:09 AM
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடா அழைத்துச் செல்வதாக ஆசை காட்டி 12 இளைஞர்களிடம் ரூ.1.60 கோடி பணத்தை மோசடி செய்துள்ளார். அவரது தாயார் செய்த சிறு தவறால் ஒட்டுமொத்த குடும்பமும் காவல்துறையிடம் சிக்கியது எப்படி?
சனி, 26 ஜூலை, 2025 அன்று 1:21:04 AM
இந்தியாவைச் சேர்ந்த அஜித் ஷெட்டி ஒரு ஆண் பெல்லி நடனக் கலைஞர், நடனத்தை தனது ஆக்ஸிஜன் என்று அவர் விவரிக்கிறார். பரதநாட்டிய ஆசிரியராக இருந்த தனது பாட்டி மூலம் தான் முதன்முதலில் கலைகளுக்கு அவர் அறிமுகப்படுத்தப்பட்டார்.
சனி, 26 ஜூலை, 2025 அன்று 9:21:12 AM
மோதியின் பிரிட்டிஷ் பயணத்தில், இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், கரூர் தொழில்துறையினருக்கு எவ்வாறு சாதகம்?
சனி, 26 ஜூலை, 2025 அன்று 2:00:19 AM
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் 3வது நாளில் ஆட்டம் முழுவதுமாக இங்கிலாந்து வசம் சென்றுள்ள நிலையில், இந்திய அணி வெற்றி பெறுவது சுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுல் கைகளில் மட்டுமே உள்ளது.
சனி, 26 ஜூலை, 2025 அன்று 9:05:42 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜகதாப் கிராமத்தில் பௌத்த ஸ்தூப சின்னத்துடன் கூடிய 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டு சில சுவாரஸ்யமான செய்திகளைச் சொல்கிறது.
சனி, 26 ஜூலை, 2025 அன்று 10:01:23 AM
தாய்லாந்து, கம்போடியா இடையிலான பிரச்னை சமீபத்தில் தோன்றியது அல்ல. இது ஒரு நூற்றாண்டுக்கும் முன்பே தொடங்கியது. ஆனால், 2008ஆம் ஆண்டில்தான் அதிகாரபூர்வமாக தீவிரமடைந்தது.
வியாழன், 17 ஜூலை, 2025 அன்று 2:25:28 PM
காமராஜர் நலனுக்காக கருணாநிதி ஏசி வசதி கேட்டதாக திருச்சி சிவா கூறியுள்ளார். இதில் உண்மை உள்ளதா? இதே விஷயத்தை 2013இல் கருணாநிதி குறிப்பிட்டபோது என்ன கூறினார்?
சனி, 19 ஜூலை, 2025 அன்று 6:47:48 AM
ஆஸ்திரேலியாவின் இந்தப் பழங்குடி மக்கள், தங்கள் புனித நீரூற்றைப் பாதுகாக்க அதானி குழுமத்திற்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கத்தை எதிர்த்துப் போராடுவது ஏன்? பல்லாண்டுக் கால போராட்டத்தின் பின்னணி என்ன?
செவ்வாய், 15 ஜூலை, 2025 அன்று 4:14:47 AM
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சனி, 12 ஜூலை, 2025 அன்று 7:11:47 AM
ஆமதாபாத் விமானம் விபத்தில் சிக்குவதற்கு சில விநாடிகளுக்கு முன்பாக அதில் இருந்த விமானிகள் இருவரும் பேசிக் கொண்டது என்ன? அறிக்கையில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது என்ன?
சனி, 12 ஜூலை, 2025 அன்று 2:50:48 AM
தமிழ்நாட்டில் கோவில்களின் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை எடுத்து கல்லூரிகள் கட்டுவது குறித்து எடப்பாடி கே. பழனிசாமி கேள்வியெழுப்பியது, தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளாகியுள்ளது. தமிழ்நாட்டில் கோவில் நிதியில் கல்லூரி கட்ட தீர்மானித்த முதல் முதல்வர் யார் தெரியுமா?
செவ்வாய், 15 ஜூலை, 2025 அன்று 3:00:38 AM
தமிழ்நாட்டில் வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் மாணவர்களின் இருக்கைகளை அமைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் சாதக - பாதகங்கள் பற்றிய ஓர் அலசல்
வெள்ளி, 11 ஜூலை, 2025 அன்று 12:15:45 PM
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது எவ்வளவு முக்கியம்? அதை யாரெல்லாம் செய்ய வேண்டும்? செய்யாவிட்டால் என்ன சிக்கல்?
திங்கள், 14 ஜூலை, 2025 அன்று 2:19:39 AM
‘நிமிஷா பிரியா இல்லாமல் ஏமனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வரமாட்டேன்’ என்று கேரள செவிலியரின் தாய் பிரேமா குமாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏமனில் கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிமிஷா பிரியாவை காப்பாற்ற ஓராண்டுக்கும் மேலாக அவர் அங்கே தங்கியுள்ளார். பிபிசி தமிழுக்கு காணொளி வாயிலாக அவர் அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்ட விவரங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
செவ்வாய், 15 ஜூலை, 2025 அன்று 9:54:52 AM
சொற்ப ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா கோட்டைவிட்ட சில முக்கியமான ஆட்டங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பேசப்பட்டுள்ளது.
செவ்வாய், 8 ஜூலை, 2025 அன்று 2:23:08 AM
உலகெங்கிலுமிருந்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தாவூதி போரா இஸ்லாமியர்கள் முஹர்ரம் தினத்தை ஒட்டி நடத்தும் பிரம்மாண்டமான வருடாந்திர மாநாடு நிகழ்விற்காக சென்னையில் கூடியிருந்தார்கள். தாவூதி போரா இஸ்லாமியர்கள் யார்? அவர்கள் மற்ற இஸ்லாமியர்களிடமிருந்து எப்படி வேறுபட்டவர்கள்?
திங்கள், 14 ஜூலை, 2025 அன்று 3:36:37 PM
தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, அவருடைய 87 வது வயதில் இன்று பெங்களூருவில் காலமானார்.
வெள்ளி, 31 மே, 2024 அன்று 9:09:18 AM
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.